உலகம்
Typography

மெக்சிக்கோவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக 311 இந்தியர்கள் அங்கு தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை காலை டெல்லியை வந்தடையும் விதத்தில் நாடு கடத்தப் பட்டுள்ளனர். மெக்சிக்கோவின் பல மாகாணங்களில் இவ்வாறு தடுத்து வைக்கப் பட்ட இந்த இந்தியர்களிடம் உரிய பயண ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் இவர்களது விபரங்களையும் இந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் உடனடியாக விமானம் மூலம் நாடு கடத்த மெக்ஸிக்கோ அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இவர்கள் நாளை வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைகின்றனர். ஏற்கனவே அமெரிக்காவுக்குள் மெக்ஸிக்கோ வழியாக சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் மெக்ஸிகோ அரசுக்கு நெருக்கடி நிலை தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்