உலகம்
Typography

உலகின் மிக நீண்ட நேர விமான சேவையாக நியூயோர்க் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கான விமான சேவையை குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இடைவிடாது சுமார் 19 மணித்தியாலங்கள் பயணிக்கக் கூடிய இந்த விமானத்தில் 40 பயணிகளும், சிப்பந்திகளும் பயணிக்க முடியும். இதன் பயணத் தூரமானது 16 000 கிலோ மீட்டர்களாகும்.

இதற்கு முன்பு நியூயோர்க் மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான 15 000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 18 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்ட விமானப் பயணம் தான் மிக நீண்ட நேர விமானப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS