உலகம்

இந்திய பாகிஸ்தானுக்கிடையேயான காஷ்மீர் பிரச்சினையை வன்முறை இன்றி ஆக்கபூர்வமான விதத்தில் தீர்த்து வைக்க உதவத் தயார் என சீனா அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் தாம் நட்புப் பாராட்டும் விதத்தை ஒரே மாதிரி ஒப்பிடக் கூடாது என்றும் இவை இரண்டும் தனித்துவமும், சுதந்திரமும் மிக்கவை என்றும் சீனா தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் லீ கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது அவர், '3 ஆம் நபர் தலையீடு இன்றி இந்திய பாகிஸ்தான் காஷ்மீர் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க சீனா தனித்தனியாக உதவ முடியும்!' என்றுள்ளார். முன்னதாக கடந்த வாரம் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான பயணம் தொடர்பில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்

இதன்போது அவரும் ஒத்த கருத்தையே தெரிவித்ததுடன் இரு நாட்டு வல்லுறவு மட்டுமல்லாது தென்கிழக்காசியாவில் அமைதி நிலவவும் இரு நாடுகளும் மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.