உலகம்
Typography

அண்மையில், 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், பெண் இயக்குனர் ஜில் கில்டன் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் திரைப் படம் 'அபோமினபிள்.'

இந்தத் திரைப்படம் எவரெஸ்ட் சிகரம் மற்றும் பனிமனிதன் பற்றிய அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதையம்சம் கொண்ட படம். உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் அதில் சில நொடிகள் மாத்திரமே காண்பிக்கப் படும் ஒரு காட்சியால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் 'அபோமினபிள்' படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. இதனால் மலேசியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்தத் திரைப்படத்துக்குத் தமது நாட்டில் தடை விதித்துள்ளன.

இக்காட்சியை நீக்கும்படி இந்த 3 நாடுகளும் வலியுறுத்தியும் இப்படத்தின் தயாரிப்புக் குழு இதை ஏற்க மறுத்து விட்டது. இதனால் தான் இப்படத்துக்கு இந்நாடுகள் தடை விதித்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்