உலகம்

கனடா மக்களவைக்கு ‌நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின்படி, 157 இடங்களைக் கைப்பற்றி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

338 உறுப்பினர்கள் கொண்ட கனடா மக்களவைத் தேர்தலில், லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும், சென்ற தேர்தலை விட வெற்றி விகிதாசாரம், ட்ரூடோவின் கட்சிக்கு குறைந்துள்ள போதும், ஏனைய சிறு கட்சிகளுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ கூட்டணி ஆட்சி அமைக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.