உலகம்

துருக்கியின் எல்லைப் புறமான சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராஸ் அல்-அய்ன் நகரில் இருந்து குர்து படைகள் வெளியேறின.

சிரியாவின் வட பகுதியில் ஐந்து நாள் போர் நிறுத்தம் செய்த துருக்கி, ‘பாதுகாப்பு மண்டலம்’ என தாம் வரையறுக்கும் பகுதியிலிருந்து குர்தீஸ் படையினர் வெளியேறாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமென துருக்கித் தலைவர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார்..

இதேவேளை போர் நிறுத்த உடன்பாட்டுப்பிரகாரம், எங்களது கட்டுப்பாட்டிலிருந்த ரஸ் அல்-அய்ன் நகரை விட்டு, தமது வீரர்கள் முற்றாக வெளியேறிவிட்டதாக குர்தீஸ் போராளிகள் குழு அறிவித்துள்ளது.

இதேபோல் சிரியாவின் வடக்கு எல்லை பகுதியிலிருந்த அமெரிக்க ராணுவ வீரர்களும் முற்றாக அங்கிருந்து வெளியேறினர். புறப்படுவதற்கு முன்னதாக சிரியாவின் அல் ஹசாகா பகுதியில் இருந்த தங்களது விமான தளங்களைத் தாங்களே குண்டு வீசி அழித்து விட்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் சிரியாவின் வட பகுதியில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.