உலகம்

ஹாங்கொங்கில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பாரிய பொது மக்கள் போராட்டத்தில் திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் தொடங்கக் காரணமாக இருந்த கைது செய்யப் பட்ட இளைஞர் விடுவிக்கப் பட்டுள்ளார். ஹாங்கொங் கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஜூன் மாதம் அங்கு கொண்டு வரப் பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் இலட்சக் கணக்கான மக்களுடன் வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார். மேலும் விடுவிக்கப் பட்ட குற்றவாளியான சான் தொங் காய் இனது கொலை வழக்கை சீனாவில் விசாரிக்க முனைந்ததை அடுத்தே ஹாங்கொங்கில் போராட்டம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஹாங்கொக்கிற்குத் தப்பிச் செல்ல முன்பு கர்ப்பிணியாக இருந்த தனது காதலியைக் கொலை செய்ததாகத் தான் சான் தொங்-காய் மீது குற்றம் சுமத்தப் பட்டிருந்தது. ஹாங்கொங்கிற்கும் தைவானுக்கும் நாடு கடத்தும் ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் தான் குறித்த சட்டத்தைத் திருத்தப் போவதாக அரசு மும்மொழிந்திருந்தது. மேலும் தனது காதலியின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்தார் என்ற மோசடி வழக்கில் சான் தொங் காய் சிறையில் அடைக்கப் பட்டார்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப் பட்ட 20 வயதான சான் தொங் ஹாய் பாதிக்கப் பட்ட குடும்பத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார் என்பதுடன் தன் மீதான கொலைக் குற்றத்தை தைவானில் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சர்ச்சைக்குரிய மசோதா நாடாளுமன்றத்தில் முறையாக ரத்து செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.