உலகம்
Typography

பிரேசிலில் முன்னால்  அதிபர் டில்மா ரூசெஃபிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வரப் பட்டு  அவர் பதவி விலக்கப் பட்டதை அடுத்து துணை அதிபராக இருந்த 75 வயதாகும் மெக்கெல் டெமர் அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

முன்னதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டின் வருமானத்தை உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் டில்மா ரூசெஃபை பதவி விலக்குவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப் பட்டது.

தற்போது டில்மா ரூசெஃபின் அதிபர் பதவி பறிக்கப் பட்ட போதும் இனி வரும் 8 ஆண்டுகளுக்கு பொதுப் பதவிகளை வகிப்பதற்கு அவருக்குத் தடையில்லை  எனத் தெரிய வருகின்றது.  சுமார் 13 வருடங்கள் பிரேசிலின் அதிபராகப் பதவியேற்ற டில்மா ரூசெஃப் தான்  அந்நாட்டின்  முதல் பெண் அதிபரும் ஆவார்.  தற்போது  பதவியேற்றுள்ள மைக்கல் டெமெர் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு அடுத்த அதிபர் தேர்தல் வரும் வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

The Economist என்ற பிரபல நாளிதழில் வெளியான செய்தியின் பிரகாரம் டெமெர் ரூசெஃபை விட முற்றிலும்  எதிரான கொள்கைகளை உடையவர் எனத் தெரிவிக்கப்  பட்டுள்ளது. ஆயினும் இவரும்  2012  ஆம் ஆண்டு பெட்ரோபிராஸ் எண்ணெய் நிறுவனத்துடன் $400 000 டாலர் பெறுமதியான ஊழல்  குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் ஆவார். மேலும் டில்மா ரூசெஃப் அளவுக்கு றௌஸ்ஸெஃப் பிரேசிலில் பிரசித்தமானவர் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

டில்மா ரூசெஃபின் மனைவியார் மார்செலா  டெமெர் 33 வருடங்களுக்கு முன் சான்  பௌலோவின் முன்னால் அழகிப் பட்டம் பெற்றவர் ஆவார்.  மேலும் டெமெர் பிரேசிலில் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்