உலகம்
Typography

நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது.  கிஸ்போர்ன் இலிருந்து  169 கிலோமீட்டர் வடகிழக்கே  கடலுக்கு  அடியில் 30 கிலோமீட்டர்  ஆழத்தில் தாக்கிய இந்நிலநடுக்கம் பாரிய சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பெரியளவு சேதத்தை ஏற்படுத்தவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

ஆனால் பலத்த அதிர்வுகளை இந்த நில நடுக்கம் வடக்கே உள்ள தீவில் ஏற்படுத்தியுள்ளது. மேலும்  ஹாவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் விடுத்த அறிக்கையில் இந்த நில நடுக்கத்தால் சுனாமி அலைகள் எழும்பவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதே பகுதியில் நேற்றைய தினம் தான் 5.7 ரிக்டர் அளவு கொண்ட இன்னொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தே அராரோவா இலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் வடக்குத் தீவில் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS