உலகம்

வடகிழக்கு சிரியாவில் குர்துக் கிளர்ச்சியாளர்களுடன் போர் தொடுத்து வரும் துருக்கி ஆதரவுப் படைகள் அங்கு மோசமான போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருவதற்கான கைபேசி காணொளி வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இந்தப் போர்க் குற்றங்களுக்கு துருக்கியே பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என ஐ.நா சபை எச்சரித்துள்ள நிலையில், இதுதொடர்பில் விரைவில் விசாரணை நடத்தப் படும் என துருக்கி உறுதிப் படுத்தியுள்ளது.

வெளியான சில வீடியோக்களில் ஆக்டோபர் தாக்குதலில் கொல்லப் பட்ட அமாரா என்ற பெண் போராளி ஒருவரின் உடல் காலால் மிதித்து அவமதிக்கப் படுவது போன்றும் உள்ளது. இவை ISIS தீவிரவாதிகள் தயாரித்த வீடியோக்கள் போன்று உள்ள போதும் உண்மையில் இதில் தென்படும் வீரர்கள் துருக்கி இராணுவத்தின் கீழ் செயற்படும் சிரிய தேசிய இராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இந்த வீடியோக்கள் ஆக்டோபர் 21 ஆம் திகதி வடக்கு சிரியாவில் எடுக்கப் பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக அமெரிக்கப் படைகள் சிரியாவில் முகாமிட்டிருந்த போது ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் குர்துக்கள் அமெரிக்கத் துருப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது துருக்கி கிளர்ச்சியாளர்களால் நடத்தப் பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விளக்கம் கேட்கப் பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் துருக்கி வீரர்களால் இழைக்கப் பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளியாகி இருந்த காணொளிகளில் பெண் புரட்சிப் போராளி ஒருவரின் தலையைத் துண்டித்தல் மற்றும் இரு பெண் போராளிகளை சுட்டு மலையில் இருந்து தள்ளி விடுதல் போன்ற மோசமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :