உலகம்
Typography

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசன் தெற்கு ஆசியாவில் செயல்படுகிறது. இந்த அமைப்பினர் கடந்த வருடம் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்த முயற்சி செய்தனர்.

ஆயினும் அது வெற்றியளிக்கவில்லை என அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத ஒழிப்பு மைய பொறுப்பு இயக்குனராக ரஸ்செல் டிராவர்ஸ் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் மேகீ ஹசன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் சகல பிரிவுகளிலும், அதிக கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாக நான்காயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். கோரசன் பிரிவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்