உலகம்
Typography

பாகிஸ்தானில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பத் தடை செய்துள்ளது, அந்நாட்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். 

பாகிஸ்தானில் உரிமம் பெறாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளை, அந்நாட்டு கேபிள் டிவி நிறுவனங்கள் மற்றும் டிஷ் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி வந்ததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டு தொலைகாட்சி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்தன.  

எனவே, இனி பாகிஸ்தாநில் இந்தியா உள்ளிட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என்றும், அப்படி மீறி ஒளிபரப்பினால் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS