உலகம்

வடக்கு சிரியாவின் கமிஷிலி பகுதியில் முன்பு அமெரிக்க இராணுவத் தளம் இருந்த அதே பகுதியில் தற்போது ரஷ்யா படைகளை இறக்கி தளம் அமைத்துள்ளது.

இங்கு தாக்குதலுக்கு உதவும் விதத்தில் ஹெலிகாப்டர்களும் இறக்கப் பட்டுள்ளன. கடந்த 6 வருடமாக இடம்பெற்று வரும் சிரிய உள்நாட்டுப் போரில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக சிரிய அரச படைக்கு ரஷ்யா உதவி வருகின்றது. மேலும் இதுவரை நடந்த போரில் ISIS வசமிருந்து பெரும்பாலான பகுதிகள் மீட்கப் பட்டு விட்டன.

தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் இறுதிப் பகுதியான இட்லிப் இனைக் கைப்பற்ற அங்கு தீவிர போர் நடந்து வருகின்றது. அண்மையில் தீவிரவாதிகளை எதிர்த்து வடக்கு சிரியாவில் அமெரிக்கப் படைகளின் ஆதரவுடன் போரிட்டு வந்த குர்துப் படைகள் மீது துருக்கி போர் தொடுப்பதாக அறிவித்ததை அடுத்து அங்கிருந்த அமெரிக்கப் படைகளை அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார்.

இதையடுத்து துருக்கி குர்துக்கள் மீது தாக்குதலைத் தீவிரப் படுத்தியது. ஆனால் ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் தலையீட்டை அடுத்து இரு தரப்பும் தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.