உலகம்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை த் விதித்திருப்பதாலும், அங்கிருந்து எண்ணெய் வாங்க பிற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதாலும் அங்கு நிலமை முற்றிலும் மாறியுள்ளது.

ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப் பட்டதை அடுத்து பொது மக்கள் வீதிகளில் இறங்கி கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் மானிய விலையில் பெட்ரோல் வழங்கக் கடும் கட்டுப்பாடு கொண்டு வரப் பட்டுள்ளதுடன் ஒரு மாதத்துக்கு ஒரு காருக்கு 60 லீட்டர் மாத்திரமே தரப்படும் என்றும் அதற்கு மேல் வாங்குவதானால் இரு மடங்கு விலை தர வேண்டும் எனவும் அங்கு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இணைய ரீதியிலான சேவைகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெஹ்ரான் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளில் நள்ளிரவிலும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்த ஏராளமான போலிசார் குவிக்கப் பட்டுள்ளதுடன் கண்ணிர்ப் புகைக் குண்டுகள் போராட்டக் காரர்கள் மீது பிரயோகிக்கப் பட்டும் உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்காக மாத்திரமன்றி ஈரான் அரசுக்கும் அதன் பிராந்தியக் கொள்கைக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டங்களின் போது கோஷம் எழுப்பப் பட்டது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.