உலகம்

ஹாங்காங் நிர்வாகத்தில் அதீத தலையீடு செய்து வரும் சீன அரசுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் கடும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதுவரை ஏராளமான ஹாங்காங் போலீசாரைக் களம் இறக்கி மாத்திரமே கட்டுப்படுத்தப் பட்டு வந்த இந்தப் போராட்டத்தில் முதன் முறையாக சீன இராணுவத்தைக் களம்மிறக்கியுள்ளது அந்நாட்டு அரசு. முன்னதாக ஹாங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்துவது என்று கொண்டு வரப்பட்ட திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வெடித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் ஹாங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு மக்களால் தீவிர ஆர்ப்பாட்டங்கள் தற்போது தொடர்ந்தும் 6 மாதங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் போராட்டக் காரர்கள் ஏற்படுத்தியுள்ள சாலைத் தடுப்புக்களை நீக்கும் பணியில் சீன இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

ஆனாலும் ஹாங்கொங்கில் நிலமை இன்னமும் சீராகவில்லை. அங்கு மாணவர்களாலும், பொது மக்களாலும் முற்றுகையிடப்பட்ட பள்ளிகளில் உணவு மாத்திரமன்றி பெட்ரோல் குண்டுகள் போன்ற ஆயுதங்களும் தயாரிக்கப் படுவதாகவும் இது போன்ற கல்லூரி வளாகங்களைத் தமது பாதுகாப்புப் பகுதியாக போராட்டக் காரர்கள் பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம் மேற்கு சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 இலட்சம் உய்குர் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப் பட்டுள்ளனர். இச்செய்தியை வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சீனாவின் இச்செயல் அமெரிக்கா போன்ற நாடுகளின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.