உலகம்

கலிபோர்னியாவின் தென் பகுதியிலுள்ள சாகஸ் உயர் நிலைப் பள்ளியில் அண்மையில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலியாகியும், 3 பேர் காயம் அடைந்தும் இருந்தனர்.

பின்னர் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொன்ற இம்மாணவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவ மனையில் உயிரழந்துள்ளார். தற்போது இச்சம்பவம் தொடர்பான ஆழமான விசாரணைகளைப் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் மிகவும் ஆரோக்கியமான நல்ல மனநிலை கொண்ட கல்வி விளையாட்டுக்களில் ஆர்வம் மிகுந்த மாணவர் என்று தெரிய வந்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.