உலகம்

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான நகரமொன்றை இத்தாலிய மற்றும் பாகிஸ்தானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பசிரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்நகரம் கி.பி 326 ஆமாண்டு மாவீரன் அலெக்ஸாண்டரால் முற்றுகையிடப் பட்ட நகரமாகும். மேலும் இந்நகரை வெற்றி கொண்ட பேரரசர் அலெக்ஸாண்டர் இங்கு ஒரு கோட்டையை எழுப்பியதாகவும் கூறப்படுகின்றது.

அலெக்ஸாண்டருக்கு முன் இந்நகரில் இந்து ஷாகி மற்றும் புத்த மதத்தினர் வசித்து வந்துள்ளனர்.

அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பண்டைய இந்துக்களின் கோயில்கள், நாணயங்கள், பானைகள் தூண்கள் மற்றும் ஆயுதங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.