உலகம்
Typography

ஜிகா வைரஸ் தாக்கத்தினால் 200 கோடி பேர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். THE LANCET INFECTIOUS DISEASES மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். 

ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் மக்கள் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதா‌கவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.  

அதே நேரத்‌தில் வைரஸ் பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் பல இடங்களிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு குறையக்கூடும் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் ஜிகா வைரஸ் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS