உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் அங்கிருந்து பெட்ரோல் வாங்கக் கூடாது என்ற சர்வதேசம் மீதான அமெரிக்காவின் வலியுறுத்தல் போன்ற காரணிகளால் ஈரானில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஈரானுக்கு உள்ளே பெட்ரோலுக்கான மானியத்தை அதிபர் ஹசன் றௌஹானி உயர்த்தியதால் அங்கு பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த ஈரான் மக்கள் 5 நாட்களுக்கு முன்னதாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.

மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோல் வருமானம் மூலம் ஈரானில் கஷ்டத்திலுள்ள ஏழை மக்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப் படும் என அதிபர் அறிவித்தும் மக்கள் சமாதானம் அடையவில்லை.

அண்மையில் இப்போராட்டம் கலவரமாக மாறியதில் வெடித்த வன்முறை காரணமாக 100 பேர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்தும் 1000 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் பட்டும் உள்ளனர். கடும் ஆத்திரத்தில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களால் நெடுஞ்சாலைகள் முடக்கப் பட்டும், கடைகள், வணிக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தீ மூட்டப் பட்டும் உள்ளன.

இதனால் ஈரானில் உச்சக் கட்ட பதற்றம் நிலவுகின்றது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.