உலகம்

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற மோசமான பஸ் விபத்து ஒன்றில் 25 பேர் பலியாகியும் மேலும்  பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். மெக்ஸிக்கோ தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டி மற்றும் பச்சுவ்கா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இவ்விபத்து இடம்பெற்றது.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்து 3 பேருந்துக்கள் ஒன்றுடன் இன்னொன்று மோதிக் கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே 25 பேர் உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கொல்லப் பட்டவர்களில் மூவர் சிறுவர்கள் எனவும் ஒருவர் அமெரிக்கர் எனவும் அடையாளம் காணப் பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.