உலகம்

அமெரிக்கா தனது விரோதப் போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் அணுவாயுதத்தைக் கைவிடுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது.

அதாவது இது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை எட்ட வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தான் வடகொரியா இவ்வாறு அறிவித்திருப்பது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 ஆமாண்டு இவ்விரு தேசத் தலைவர்களும் சிங்கப்பூரில் தமது முதல் சந்திப்பையும் பின்னர் 2 ஆவது தடவையாக இவ்வருடம் பெப்ரவரியில் இரு நாட்களுக்கு வியட்நாம் தலைநகர் ஹனோயிலும் தமது நேரடி சந்திப்பை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.