உலகம்

ஹாங்கொங் போராட்டத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப் பட்டுள்ளது.

பிரிட்டனின் ஆட்சியில் இருந்து 1997 ஆமாண்டு விடுபட்டு சீன அரசின் கீழ் ஹாங்கொங் வந்து விட்ட போதும் இன்று வரை அங்கு நீதித்துறை உட்பட மக்களின் சுதந்திரத்தை மீறும் பல கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகின்றது.


இந்நிலையில் கடந்த 6 மாதமாக ஹாங்கொங்கில் சீனா மீது 5 அம்சம் அடங்கிய ஜனநாயகக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடும் போராட்டம் நடந்து வருகின்றது.இப்போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க அண்மையில் சீன இராணுவம் ஹாங்கொங்கில் குவிக்கப் பட்டுள்ளது. சீனாவின் இப்போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா ஹாங்கொங்கில் உள்ள சீன அரசு மீது தூதரக நடவடிக்கை எடுக்கவும், பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் முனைந்துள்ளது.

இதுதவிர ஹாங்கொங் போலிசார் அமெரிக்க வணிக நிறுவனங்கள் சிலவற்றிடம் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்வதும் தடுக்கப் படும் என்றும் தெரிய வருகின்றது. அமெரிக்காவின் செனட் சபையில் தீர்மானிக்கப் பட்ட இந்த மசோதாக்களுக்கு எதிராக சீன வெளியுறவு அமைச்சு சீனாவுக்கான அமெரிக்கத் தூதருக்கு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். 

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை கீழ் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு மதுரை உயிர் நீதிமன்றகிளையில் நடைபெற்றுவருகிறது.

கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

வடக்கு மியான்மரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 113 பேர் வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.