உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இதன்போது அவர் ஆப்கானில் அமைதிப் பேச்சுவார்த்தை, காஷ்மீர் விவகாரம் போன்ற பல பிராந்திய விவகாரங்கள் குறித்து கலந்தாய்வு செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினையில் சுமுகமான தீர்வைக் காண அதிபர் டிரம்ப் தன்னால் இயந்ற உதவியை வழங்க வேண்டும் எனவும் இதன்போது இம்ரான் கான் கோரிக்கை வைத்ததாகவும் தெரிய வருகின்றது.

காஷ்மீர் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட தொடர்ந்து முயற்சித்து வரும் பாகிஸ்தான் அண்மையில் காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து இவ்விவகாரத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே கோரிக்கை வைக்கும் பட்சத்தில் இவ்விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்று தெரிவித்து வருகின்றார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.