உலகம்

அண்மையில் தாய்லாந்தில் இருந்து 4 நாள் பயணமாக ஜப்பானுக்கு போப் பிரான்சிஸ் வந்தடைந்துள்ளார்.

முதற் கட்டமாக அவர் 2 ஆம் உலகப் போரில் அணுகுண்டினால் பேரழிவைச் சந்தித்த நாகசாகி நகரை வந்தடைந்தார். சுமார் 74 000 உயிர்களைக் களத்திலேயே பழி கொண்ட இந்த அணுகுண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக போப் அஞ்சலி செய்து ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இவர் பேசுவதைக் கேட்க கொட்டும் மழையிலும் நூற்றுக் கணக்கான மக்கள் கூடியிருந்தனர். போப் இங்கிருந்து உரையாற்றும் போது உலக நாடுகள் அணுகுண்டுகளை ஒழிக்கும் படி உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். மனிதர்கள் மற்றைய மனிதர்கள் மீது ஏற்படுத்தக் கூடிய பயங்கரம் மற்றும் வலியை இந்த இடம் ஆழமாக நினைவு படுத்துகின்றது என்று தெரிவித்த போப் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதை நிபந்தனையின்றி கண்டித்தார்.

அதாவது இவற்றைத் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துவது, இதனால் ஒருவரை இன்னொருவர் அழிப்பது தொடர்பான பயமும், மொத்தமாக அழிந்து போவது பற்றிய அச்சுறுத்தலும் உலக அமைதிக்கு உதவாது என போப் குறிப்பிட்டார். இது தவிர உலகமெங்கும் அணுவாயுதத் தயாரிப்பில் வீணாக்கப் படும் பணம் குறித்தும் போப் விமரிசித்தார்.

அணுகுண்டினால் பெரும் அழிவைச் சந்தித்த இன்னொரு நகரமான ஹிரோஷிமாவில் நடந்த அமைதிப் பிரார்த்தனை ஒன்றிலும் போப் கலந்து கொண்டதாகத் தெரிய வருகின்றது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.