உலகம்

மலேசியாவில் எஞ்சியிருந்த இறுதி சுமத்ரான் வகைக் காண்டா மிருகமும் முற்றிலும் அழிந்து விட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மலேசியாவின் போர்னியோ தீவுகளில் வசித்து வந்த கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகமான சபா கடந்த மே மாதம் இறந்திருந்தது. இந்நிலையில் தற்போது இமான் என்ற 25 வயது நிரம்பிய பெண் காண்டாமிருகமும் புற்று நோயால் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சில தசாப்தங்களுக்கு முன் ஆசியக் கண்டம் பரவலாக வாழ்ந்து வந்த இந்த காண்டா மிருகம் அதன் தோல் மற்றும் கொம்புகளுக்காக அதிகளவில் வேட்டையாடப் பட்டது. இது தவிர பல்வேறு இயற்கைக் காரணிகளாலும் விரைவான அழிவைச் சந்தித்து வந்துள்ள இந்தக் காண்டா மிருகம் தற்போது இந்தோனேசியாவில் மாத்திரமே இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலுள்ள இந்தக் காண்டா மிருகங்களின் எண்ணிக்கை வெறும் 80 எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.