உலகம்

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி ஹாங்கொங்கில் பொது மக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

மறுபுறம் அங்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக ஆதரவுக் கட்சி வெற்றி பெற்றிருந்ததால் சீனாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் ஹாங்கொங்கில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மசோதா அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதற்கு அங்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஹாங்கொங்கில் மனித உரிமை மீறுவோர் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கவும் வகை செய்யும் இந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் கைச்சாத்திட்டார்.

இந்த மசோதா சட்டமானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்குச் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ஹாங்காங் விவகாரம் சீனாவின் உள் விவகாரம் என்றும் இதில் தலையிடுவது சீனா மீது தலையிடுவதற்குச் சமன் என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்குப் பதிலடி தர சீனா தயார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்க அரசின் புதிய விசா முடக்கம் தொடர்பான உத்தரவால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இப்புதிய உத்தரவுக்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் புதிய கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக இரண்டாம் கட்ட லாக்டவுனை தொடங்கியுள்ளது.