உலகம்

ஹாலிவுட் நடிகரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ தான் அண்மையில் அமேசான் காட்டுக்குத் தீ வைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டியுள்ளார்.

தன் மீதான இந்த குற்றச் சாட்டை முழுவதும் மறுத்துள்ளார் டைட்டானிக் புகழ் ஹீரோ டிகாப்ரியோ.

பூமியின் நுரையீரல் என்றழைக்கப் படும் சுற்றுச் சூழல் முக்கியத்துவம் மிக்க உலகின் மிகப் பெரும் மழைக்காடான அமேசானில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீ உலகளவில் கவலைக்குரியதாகவும், விவாதத்துக்குரிய பொருளாகவும் மாறியிருந்தது. இத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக நடிகர் டிகாப்ரியோ தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் அண்மையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் காட்டுக்குத் தீ வைத்த குழுக்களுக்கு ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தான் பணம் கொடுத்தவர் என்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தன்மீதான அபாண்டமான குற்றச்சாட்டை மறுத்துள்ள டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து எழுதியுள்ளார். அதில் ' அமேசன் காட்டுத் தீ பிரச்சினை நேரத்தில் இயற்கை வளம், மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் போராடும் பிரேசில் மக்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். இதேவேளை நான் எந்தவொரு அமைப்புக்கும் பண உதவி செய்வதில்லை! எதிர்கால நண்மைக்காக அமேசானைப் பாதுகாக்கும் முயற்சியில், விஞ்ஞானிகளுக்கும், கல்வியாளர்களுக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்!' என்றுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.