உலகம்

அமெரிக்காவுடன் இனிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவிதப் பயனும் இல்லை என வடகொரியா இறுதி முடிவு எடுத்திருப்பதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த பல வருடங்களாக வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணை சோதனைகளால் பகைமை தேசங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் விளங்கி வந்தன.

ஆனால் எதிர்பாராத விதத்தில் இரு தேசங்களது அதிபர்களும் முதன் முறை 2018 மே மாதம் சிங்கப்பூரில் நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் 2 ஆவது நேரடிப் பேச்சுவார்த்தை இவ்வருடம் பெப்ரவரியில் வியட்நாமில் இடம்பெற்றது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததாகவே கருதப் பட்டது. இதைத் தொடர்ந்து யாருமே எதிர்பாராத வகையில், டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன்னை சந்தித்தார்.

இதன் பின் அணுவாயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது வடகொரியாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அது மீண்டும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதிக்கத் தொடங்கியது. எனினும் இந்த ஏவுகணை சோதனைகள் இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்தது.

மேலும் வடகொரியா மீதான குறிப்பிடத்தக்க பொருளாதாரத் தடைகளை நீக்கும் புது ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை விதித்தது. மேலும் அமெரிக்கா தவறினால் வடகொரியா புதிய பாதையைக் கடைப் பிடிக்கும் எனவும் அது எச்சரித்தது.
இந்நிலையில் தான் அமெரிக்காவுடனான அணுவாயுதப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் யாவும் அடைப்பட்டு விட்டதாக சனிக்கிழமை வடகொரியா அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் ஜோங் தகவல் அளிக்கையில், அமெரிக்காவுடன் இனிப் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறியதாகத் தெரிய வருகின்றது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.