உலகம்
Typography

திங்கட்கிழமை இந்தியப் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப் பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளை புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்கள் அவையில் இக்குடியுரிமை திருத்த மசோதா உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

இந்த மசோதாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப் படாது என்றும், 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம்,
ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனாலேயே எதிர்க்கட்சிகளிடமும், பாகிஸ்தான் பிரதமரிடமும் கடும் கண்டனத்தை இது சம்பாதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட கருத்தில், இந்த மசோதா மனித உரிமைகள் சட்டத்தை மீறும் வகையிலும், பாகிஸ்தானுடனான இருதரப்பு ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்ன விமர்சித்துள்ளதுடன், இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்