உலகம்
Typography

சிலி நாட்டைச் சேர்ந்த இராணுவ விமானமொன்று நடுவானில் மாயமாகியுள்ளதை அடுத்து அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தென் சிலியில் இருந்து அண்டார்ட்டிக்காவில் உள்ள விமானப் படை தளத்துக்கு புறப்பட்ட அந்நாட்டு இராணுவத்தைச் சேர்ந்த ஏசி-130 என்ற ஹெர்குலஸ் ரக விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது.

இந்த விமானத்தில் மொத்தம் 38 பேர் பயணித்துள்ளனர். தற்போது மாயமான இந்த விமானத்தை சிலி நாட்டின் விமானப் படை விமானங்கள் மும்முரமாகத் தேடி வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்