உலகம்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் பலியாகி விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இப்பகுதிகளில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100 வேறுபட்ட இடங்களில் காட்டுத் தீ கடுமையாகப் பரவியது.

2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் இதனால் நாசமானது. 500 வீடுகள் பழுதடைந்தும், 4 பேர் உயிரிழந்தும் இருந்தனர். இன்றை வரைக்கும் இக்காட்டுத் தீ முழுமையான கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. தற்போது 50 இடங்களில் இக்காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்நிலையில் தான் கோலா கரடிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை சூழலியல் நிபுணர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் பல கோலாக் கரடிகளின் வாழ்விடங்களும் காட்டுத் தீயில் அழிந்து விட்டதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.