உலகம்

#FridaysForFuture எனும் போராட்டத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட இளம் சமூகச் செயற்பாட்டாளர் சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவரை 2019 ம் சிறந்த நபராக டைம் பத்திரிகை அறிவித்து, டைம்ஸ் பத்திரிகையில் அட்டைப்படத்தில் அவரது படத்தைவெளியிட்டு மரியாதை செய்துள்ளது.

உலக வெப்பமயமாதலை தடுப்பதற்காகத் தனி ஒரு ஆளாக இவர் தொடங்கிய போராட்டம் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலமானது.
இநத் ஆண்டிற்கான நோல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது "உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்தும் இளம் சமூகச் செயற்பாட்டாளர் '' என்று டைம் பத்திரிக்கை புகழாரம் சூட்டியிருக்கிறது.

டைம் பத்திரிக்கையின் வரலாற்றில், இந்த விருதுக்கு இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய கிரேட்டா தன்பெர்க் தான் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டைம் பத்திரிகை வழங்கிய இந்தச் சிறப்புக் கௌரவத்தை, #FridaysForFuture இயக்கத்தினருடனும், உலகெங்கிலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் அனைவருடனம் பகிர்ந்துகொள்வதாக கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். 

“பொதுத் தேர்தலில் எமக்கு மக்கள் வழங்கியிருக்கின்ற வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.