உலகம்

சிலி நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமானவிமானமொன்று திடீரெனக் காணமற் போயிருந்தது. தொடர்பற்றுப் போயிருந்த அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஊகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், தற்போது விமானத்தின் பாகங்கள் தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிக்கிற்குமிடையிலான கடற்பரப்பில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது.

38 பேருடன் அண்டார்டிகா நோக்கி பயணித்த சிலி இராணுவத்திற்குச் சொந்தமான இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதில் 38 பேர் பயணம் செய்திருந்தார்கள்.

காணமற்போன விமானத்தை தேடும்பணி கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், அதன் பாகங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

இதன்மூலம் அவ்விமானம் விபத்தில் சிக்கியது உறுதியாகியுள்ளதாயினும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் எண்ணப்படுவதாகவும் தெரியவருகிறது.