உலகம்

பிரித்தானியப் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 

50 தொகுதிகளைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு நேற்று வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10.00 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தெரிவித்தன. தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜெரமி கோர்பின், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 05.30 மணியளவில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 349 தொகுதிகளில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

இதனால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஏற்கெனவே கைவசம் இருந்த பல்வேறு தொகுதிகளை இழந்த தொழிலாளர் கட்சி, 202 இடங்களை பிடித்திருந்தது.

அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் வெளியானபின்னர், போரிஸ் ஜோன்சன், பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

ஒன்பதாவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா வழிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.