உலகம்

பிரிட்டனில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இடங்களை வென்றும் மறுபடியும் பிரதமராகி உள்ளார்.

மேலும் இந்த வெற்றி மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அடுத்த மாத இறுதிக்குள் இங்கிலாந்து வெளியேறும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி படத் தெரிவித்துள்ளார்.

1980 ஆமாண்டுக்குப் பிறகு முதன் முறையாக பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 365 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மை வெற்றியை ஈட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து இலண்டன் மகாராணியார் எலிசபெத்தினை பிரதமர் நேரில் சந்தித்ததுடன், இச்சந்திப்பின் போது புதிய அரசை அமைக்குமாறு அவருக்கு இராணியார் அதிகாரப்பூர்வ அழைப்பையும் விடுத்ததாகத் தெரிய வருகின்றது.

போரிஸ் ஜான்சனின் வெற்றியைத் தொடர்ந்து பிரெக்ஸிட் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.நடைபெற்று முடிந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.