உலகம்

கடந்த 6 ஆம் திகதி முதல் சீற்றமடைந்துள்ள நியூசிலாந்தின் வெள்ளைத்தீவு எரிமலை செயற்பாட்டில் மூச்சுத் திணறிப் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் சமீபத்தில் இன்னும் 6 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. 6 ஆம் திகதி இந்த எரிமலை சீற்றமடைந்த பொழுந்து அங்கு கிட்டத்தட்ட 47 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுக் கொண்டு இருந்ததாகத் தெரிய வருகின்றது.

இந்த எரிமலை சீற்றத்தில் காயமடைந்த 20 இற்கும் அதிகமானவர்கள் இராணுவத்தினரால் மீட்கப் பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். நியூசிலாந்தின் வகாடனே என்ற நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் வெளைத் தீவு அமைந்துள்ளது.

தற்போது இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்ற அபாயம் இருந்து வரும் நிலையில் அங்கு தமது உயிரைப் பயணம் வைத்து இராணுவத்தினர் காணாமற் போயுள்ள சுற்றுலாப் பயணிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.