உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸின் மிண்டோனோவ் தீவு அருகே தாவோ நகரை மையமாகக் கொண்டு 6.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

இதன் போது மிக வலிமையான அதிர்வுகள் உணரப் பட்ட போதும், கடும் சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை. மேலும் நிலநடுக்கத்தின் தீவிரத்தை அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS உறுதிப் படுத்தியுள்ளது.

மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுவிக்கப் படவில்லை. பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையம் எனப்படும் உலகின் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை செயற்பாடு அதிகம் நிகழும் Ring of Fire என்ற வலயத்துக்குள் பிலிப்பைன்ஸின் ஏராளமான தீவுகள் உள்ளடங்குகின்றன. 2004 ஆமாண்டு இந்து சமுத்திரத்தில் 9.5 ரிக்டர் அளவில் தாக்கிய மிகப்பெரும் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமி அலைகளால் பிலிப்பைன்ஸும் பேரழிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெற்கு மிண்டோனோ நகரான தாவோ நகர் குறிப்பிடத்தக்க மக்கள் தொகை கொண்ட நகரம் ஆகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்