உலகம்

பிரிட்டனில் அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகி உள்ள போரிஸ் ஜான்சன் தேர்தல் சமயத்தில் பிரிட்டன் வாழ் தமிழ்ச் சமூகத்துக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ ஒன்று வெளியாகிப் பிரசித்தமடைந்துள்ளது.

அந்த வீடியோவில் போரிஸ் ஜான்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'வணக்கம், எமது தேசத்துக்கு தமிழ் சமூகம் செய்துள்ள அனைத்து விடயங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாக தேசிய சுகாதார சேவை, கல்விச் சேவை, கல்வி சார்ந்த சாதனைகள், தொழில் ஆகியவற்றில் தமிழர்கள் மிகச் சிறந்த மாற்றத்தை உண்டாக்கியுள்ளனர். பிரெக்ஸிட்டில் இருந்து நாம் வெளியேறி விட்டால் தொழில் முனைவோருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்க முடியும். தேசிய சுகாதார சேவைக்கு சாதகமாக முதலீடுகளை அதிகரிக்க முடிவதுடன், அவுஸ்திரேலியாவில் இருப்பது போல பிரிட்டன் குடியுரிமை சட்டத்திலும் சிறப்பான மாற்றத்தை உருவாக்க முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உலகில் எந்தப் பாகத்தில் இருந்து பிரிட்டனுக்கு வருவோரையும் சம கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும் என்பது உறுதி. மேலும் உலகில் வாழ்வதற்குச் சிறந்த இடமாக பிரிட்டனை மாற்றியதில் அற்புதமான பங்களிப்பை வழங்கிய தமிழ்ச் சமூகத்துக்கு நன்றி.!' என்று கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் பிரதமர் போரிஸ் ஜான்சன், மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப் படும் எனத் தான் நம்புவதாகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் நீண்ட கால அமைதி நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :