உலகம்
Typography

திங்கட்கிழமை யுனெஸ்கோவினால் வெளியிடப் பட்ட ஓர் அறிக்கையில் வருங்காலத்தில் உலகளாவிய கல்வித் தகைமைகளை அடைவதில் மற்ற வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா அரை நூற்றாண்டுக்குப் பின்னால் தள்ளப் பட்டு இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது உலகளாவிய ஆரம்பக் கல்வித் தகைமைகளை 2050 இலும், உலகளாவிய தாழ்ந்த 2 ஆம் தரக் கல்வித் தகைமைகளை 2060 இலும், உலகளாவிய மேல்மட்ட 2 ஆம் தரக் கல்வித் தகைமைகளை 2085 இலும் தான் இந்தியா எட்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்  பட்டுள்ளது. உலகளாவிய தரக் கணிப்பீட்டின் காலக்கெடுவான 2030 ஆம் ஆண்டுக்குள் உரிய கல்வி அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமானால் இந்தியா கல்விக்கென அடிப்படை மாற்றங்களை உடனே செய்வது அவசியம் என்று பூகோள கல்வி கண்காணிப்பு அமைப்பான GEM இன் அறிக்கை  தெரிவிக்கின்றது.

 

GEM இன் அறிக்கைப் படி, இந்தியாவில் 60 மில்லியன் சிறுவர்கள் மிகக் குறைந்த கல்வியை பெறுவதாகவும் அல்லது எந்தவிதக் கல்வியையும் பெறுவதில்லை என்றும்  தாழ்ந்த 2 ஆம் தரப் பிரிவின் பின்னர் 11.1 மில்லியன் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுவதாகவும் இதுவே  உலகளாவிய ரீதியில் மிக அதிகமாகும் என்றும்  கூறப் பட்டுள்ளது. மேலும் மேல் மட்ட 2 ஆம் தரத்தின் பின் 46.8 பேர் பள்ளியை விட்டு வெளியேறுவதாகவும், 2.9 மில்லியன் மாணவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெறக் கூடச் செல்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதைவிட 2020 ஆம் ஆண்டு அளவில் பிராந்தியக் கல்வி புகட்டும் பிரிவில் 40 மில்லியன் பேர் இல்லாமல் போய் விடுவார்கள் என்றும்  எச்சரிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை  உலகம் முழுதும்  40% வீதமான மாணவர்கள் தமக்குப் புரியாத மொழியில் கற்பிக்கப் படுவதாகக் கூட அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 300 மில்லியன் மாணவர்கள் சூழலியல் கல்வியைக் கற்று வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்