உலகம்
Typography

புதன்கிழமை வியட்நாம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பிலும் தொழில்துறையிலும் தமது  கூட்டுறவை வலுப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் வியட்நாம் தலைநகர் ஹனோய் இற்கு இன்று விஜயம் செய்த பிரெஞ்சு அதிபர் ஃபிரான்கொயிஸ் ஹாலந்து தலைமையில் கைச்சாத்து ஆகியுள்ளது.

இதைத் தொடர்ந்து வெளியான கூட்டு அறிக்கை ஒன்றில்  இவ்விரு நாடுகளும் விரைவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வர்த்தகம்,  தொழிநுட்ப பங்கீடுகள் மற்றும் தொழில்துறை கூட்டுறவு தொடர்பில் ஆய்வு  செய்ய ஓர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு கூட்டுறவு எனும்போது அதில் இராணுவ மருத்துவம் , கடற்படை கப்பல்கள் பயணம், கடற்பிராந்திய பாதுகாப்பு  மற்றும் அமைதிகாக்கும் யுத்தி என்பவை தொடர்பில் விரிவாக்கம் செய்யப் படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு தாபிக்கப் பட்ட தேசிய பாதுகாப்புக் கூட்டுறவுக்கான வியட்நாம் - பிரான்ஸ் கூட்டு கமிட்டி உடன் குறித்த பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பு பட்டிருக்கும் என்றும்  இது இரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய நட்புறவை வலுப்படுத்தும் எனவும் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS