உலகம்
Typography

கடந்த பல தசாப்தங்களில் முதன் முறையாக ஹஜ் யாத்திரையில் இருந்து ஈரான் சவுதி அரேபியாவால் வெளியேற்றப் பட்டதில் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே இவ்விடயம் தொடர்பில் வார்த்தை யுத்தம் சூடேறி வருகின்றது.  மே மாதம் சவுதி அரேபியாவின் மெக்காவில் சில பாதுகாப்புக் காரணங்களால் ஈரானியர்கள் ஹஜ் யாத்திரை நிமித்தம் சவுதி அரேபியாவுக்கு வர அந்நாடு தடை விதித்திருந்தது. 

ஈரான் சுப்ரீம் மதத் தலைவர் அயதொல்லா அலி கமெனெய் கடந்த வருடம் சவுதி யாத்திரையில் ஏற்பட்ட நெரிசலில் பல ஈரானியர்கள் கொல்லப் பட்டமைக்கு  சவுதியின் உயர் அரச குடும்பத்தை கடினமான வார்த்தைப் பிரயோகத்தால் தாக்கி இருந்தார். சுன்னி முஸ்லிம்களின் இராச்சியமான சவுதியும் ஷைட்டி முஸ்லிம்களின் பெரும்பான்மை வல்லரசான ஈரானும் சிரியா உள்நாட்டுப் போர் மட்டுமன்றி மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் இன்னும் சில குழப்ப நிலைகளிலும் எதிர் எதிர் அணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் சவுதி அரச குடும்பத்தினர் கொலையாளிகள் என்றும் கடவுள் தன்மை அற்ற மதத்துக்குப் புறம்பானவர்கள் என்றும் அயதொல்லா அலி கமெனெய் சாடியுள்ளார். இதைத் தொடர்ந்து சவுதி பத்திரிகையான மக்கா இற்கு சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்த  Sheikh Abdulaziz Al al-Sheikh என்பவர் அளித்த செவ்வியில் கமெனெய் இன் கூற்றுக்கு தான் ஆச்சரியப் படவில்லை என்றும்  அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் பிரதான எதிரிகளே சுன்னி முஸ்லிம்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு சவுதியின் புனித மெக்கா தலத்தில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் 769 யாத்திரீகர்கள் கொல்லப் பட்டிருந்தனர். இதில் 400 இற்கும் அதிகமானவர்கள் ஈரானியர்கள் ஆவர். ஆனால் சில நாடுகளின் கணிப்பீட்டின் பின்னர் வெளியான தகவல்களில் சுமார் 2000 சடலங்கல் இந்த நெரிசலில் கொல்லப் பட்டவர்களது என்றும் கூறப்பட்டுள்ளது.  ஆனால் இதனை சவுதி உறுதி செய்யவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS