உலகம்

2008 ஆமாண்டு பல மனித உயிர்களைக் கொன்று குவித்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் சூத்திர தாரியான லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் தான் ஹபீஸ் சயீதுக்கு இச்சிறைத் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதலின் பின் ஹபீஸ் சயீது மற்றும் அவனுடன் தொடர்புடைய ஜமாத் உத் தாவா என்ற பல்வேறு தீவிரவாத அமைப்புக்களையும் ஐ.நா ஏற்கனவே தீவிரவாத அமைப்புக்களாகப் பிரகடனப் படுத்தி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர மும்பைத் தாக்குதலுக்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கிய போதும் இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயலாற்றி வந்திருந்தான். இவன் மீது ஏற்கனவே 23 தீவிரவாத வழக்குகள் உள்ளன.

2017 இல் ஏற்கனவே ஹபீஸ் சயிது மற்றும் அவனின் 4 உறவினர்கள் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டனர். ஆனால் 11 மாதத்துக்குள் விடுவிக்கப் பட்டனர். இதையடுத்து அதிகரித்த சர்வதேசத்தின் அழுத்தத்தினால் பஞ்சாப் போலிசின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து ஹபீஸ் சயீதைக் கைது செய்துள்ளனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.