உலகம்

கோவிட்-19 என்ற கொரோனா வைரஸுக்கு சீனாவில் பலி எண்ணிக்கை 1500 ஐயும், பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 50 000 ஐயும் விரைந்து நெருங்கி வருகின்றது.

சீனாவைத் தவிர்த்து ஜப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலா ஒருவர் மரணித்தும் 27 உலக நாடுகளில் பரவியும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே சிங்கப்பூரில் இதன் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.

புதன்கிழமை சிங்கப்பூரில் டிபிஎஸ் என்ற பிரபல வங்கியின் கிளை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து அங்கு பணியாற்றி வந்த 300 ஊழியர்களும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 47 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டதை அடுத்து அங்கு ஆரெஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வங்கியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப் பட்ட அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் படி அறிவுறுத்திய வங்கி அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் மாஸ்க், தெர்மாமீட்டர் போன்ற வசதிகளையும் வழங்கியுள்ளது.

இதேவேளை ஜப்பான் கடலில் தடுத்து நிறுத்தி வைக்கப் பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் உள்ள 3500 பேரில் கோவிட்-19 தொற்றுக்கு 2 இந்தியர்கள் உட்பட 218 பேர் உள்ளாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இந்தக் கப்பலில் முதற்கட்டமாக 11 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜப்பான் அரசு இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.