உலகம்

சீனாவில் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸுக்கு அதிகம் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய 3000 ஆமாண்டு பழமையான மருத்துவத்தை அந்நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜனவரி தொடக்கத்தில் இருந்து தீவிரமடையத் தொடங்கிய கோவிட்-19 வைரஸுக்கு சீனாவில் பலி எண்ணிக்கை 1600 ஐக் கடந்தும் பாதிக்கப் பட்டவர்கள் தொகை 60 000 ஐத் தாண்டியும் உள்ளது.

சனிக்கிழமை மாத்திரம் 142 பேர் இதற்குப் பலியாகி உள்ளனர். அண்மையில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்புடன் இதுவரை சீனாவுக்கு வெளியே 4 பேர் பலியாகி உள்ளனர். கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல நாட்டு மருத்துவர்களும் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் தான் 3000 ஆண்டு பழமையான சீனப் பாரம்பரிய மருந்துக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சுமார் 2200 பாரம்பரிய மருத்துவர்கள் கோவிட்-19 இனால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள ஹுபே மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

ஆனாலும் பல்லாயிரக் கணக்கான கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நோயாளிகளைச் சமாளிக்க போதியளவு மருத்துவர்களும், தாதியர்களும் இல்லாது கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதேவேளை ஜப்பானுக்கு அருகே தனிமைப் படுத்தப் பட்டுள்ள ஹாங்கொங் சொகுசுக் கப்பலான டயமண்ட் பிரின்சஸில் மேலும் 70 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சுமார் 3500 பேர் கொண்ட இக்கப்பலில் தற்போது மொத்தம் 355 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இக்கப்பலில் 137 இந்தியர்கள் பரிதவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.