உலகம்

கடந்த சில நாட்களாக பிரிட்டனைத் தாக்கி வரும் டென்னிஸ் புயலுக்குப் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததை அடுத்து வேல்ஸ் நகருக்கு சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

வேல்ஸ் நகரில் கனமழை காரணமாக அங்கு ஆற்று நீரில் வெள்ளம் ஏற்பட்டு கடந்த ஓர் இரவில் குடியிருப்புப் பகுதிகளை இந்த வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

சூறாவளிக் காற்று மற்றும் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் விமான சேவைகளும், ரயில் சேவைகளும் பாதிக்கப் பட்டதுடன் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 234 விமானங்களது பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டு வீதிப் போக்குவரத்துகளும், மின் விநியோகமும் கூட பாதிப்படைந்துள்ளன.

ரத்து செய்யப் பட்ட விமானங்களில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஈஸி ஜெட் போன்ற விமான சேவைகளின் விமானங்கள் ஆகும். புயலின் தாக்கம் இன்னும் இரு தினங்களுக்கு நீடிக்கும் என்றும் முக்கியமாக கல்டெர்டாலே, யோர்க்‌ஷைர் போன்ற பகுதிகளில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும் முன்னறிவித்தல் விடுக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.