உலகம்

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது மீண்டும் ஒருமுறை ராக்கெட்டுத் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் டிரோன் தாக்குதல் மூலம் ஈரான் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொலை செய்வதற்குப் பழிவாங்க ஈராக் அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருந்தது.

தற்போது மீண்டும் ஒருமுறை பக்தாத் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டுள்ளது. இம்முறை யார் என்ன காரணத்துக்காக ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தார்கள் என்பது குறித்தோ, சேத விபரம் குறித்தோ அமெரிக்க எந்தவொரு கருத்தையும் இன்னும் வெளியிடவில்லை. மறுபுறம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நங்கர்ஹார் மாகாணத்தின் சுர்க் ரோடு மாவட்டத்தில் இரு வாகனங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 1 குழந்தை உட்பட 8 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கான் மனித உரிமைகள் கமிசனின் தகவல் படி கடந்த ஒரு வருடத்தில் ஆப்கான் தாக்குதல்களில் மொத்தம் 2817 பேர் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.