உலகம்

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸால் பாதிப்புற்ற வுஹான் நகரைச் சேர்ந்த சுமார் 45000 பேர் தொடர்பான ஆய்வறிக்கையை சமீபத்தில் சீனா வெளியிட்டது.

அதில் இந்த வைரஸால் வயதானவர்களே அதிகம் பாதிக்கப் பட்டு மரணித்து வருவதாகவும் 80% வீதமானவர்களுக்கு இலேசான தொற்றுத் தான் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸால் மோசமாகப் பாதிக்கப் பட்ட வுஹான் நகரின் முக்கிய மருத்துவமனை ஒன்றில் தலைமை மருத்துவர் ஒருவர் இத்தொற்றுக்குப் பலியாகி உள்ளார்.

சீனாவில் இதுவரை சுமார் 1868 பேர் கோவிட்-19 தொற்றுக்குப் பலியாகியும் பாதிக்கப் பட்டவர்கள் தொகை 72 436 ஆகவும் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை மாத்திரம் 98 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 000 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை ஜப்பானில் உள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் புதிதாக 99 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து அக்கப்பலில் இத்தொற்றுக்கு ஆளானவர்கள் தொகை 454 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பேர் இந்தியர்கள் ஆவர். அண்மையில் இந்தக் கப்பலில் இருந்த தனது நாட்டைச் சேர்ந்த 340 பேரை அமெரிக்கா மீட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.