உலகம்

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் அந்நாட்டு முறைப்படி பலமுறை பரிசோதிக்கப் பட்டுத் தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி 2 ஆவது முறையாகவும் ஆப்கான் அதிபராக அஷ்ரஃப் கனி தேர்வாகியுள்ளார். அதிபர் தேர்தலின் போது அஷ்ரஃப் கனிக்கும் முன்னால் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லா என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் எதிர்த்தரப்புக்கள் குற்றம் சுமத்தின. இதனால் அண்மையில் மறு வாக்கு எண்ணிக்கை இடம்பெற்றது.

இறுதியில் இத்தேர்தலில் 50.6% வீத வாக்குகளிடன் சொற்ப வித்தியாசத்தில் தான் அஷ்ரஃப் கனி வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் தீவிரவாதத் தாக்குதல்களும் வன்முறையும் கூட ஏற்பட்டிருந்தன.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.