உலகம்

சிரியாவில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் நிரம்பி வழிவதால் அங்கு தங்கியிருக்கும் குழந்தைகள் உறைபனியில் உறைந்து தொடர்ந்து உயிரிழந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

2011 ஆமாண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யப் படைகளும், கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் துருக்கியும் செயற்பட்டு வருகின்றன. மறுபுறம் அங்கு ISIS தீவிரவாதிகளின் கையும் மேலோங்கியுள்ளது.

சிரியாவில் கடந்த 4 மாதங்களில் 1000 பேர் மரணித்துள்ளனர். வடமேற்கு சிரியாவில் இருந்து டிசம்பர் முதற்கொண்டு 9 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.தங்குமிட வசதி இண்மையால் 82 000 பேர் திறந்த வெளியில் மரங்களுக்கு அடியில், பனி வயல்களில் தங்கியுள்ளனர். இதனால் தான் குழந்தைகள் குளிர் தாங்காது இறந்து வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வடமேற்கு சிரியாவின் இட்லிப் உட்பட பகுதிகளில் கடும் போர் நிகழ்ந்து வருவதால் அங்கு வசித்து வந்த 30 இலட்சம் பேரில் 15 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து விட எஞ்சியவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டு கடும் மனித அவலமும் ஏற்பட்டுள்ளது.

சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை 380 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.