உலகம்

சீனாவில் உருவாகி உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் தொகை 2100 தாண்டியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 74576 பேர் வரையில் இத் தொற்றுக்கு ஆளாகியள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சீனாவின் இத்தகவல்கள் முழுமையானவையல்ல எனவும், இதன் பாதிப்பால் உயிரிழந்தோர் தொகை பல ஆயிரங்கள் எனும் அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் அவை எதுவும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என சீன அரசு மறுத்து வருகிறது. உண்மையில் தற்போது வைரஸ் தாக்கம் குறைந்து வருவதாகவும், அதற்குள்ளான பலர் நோய்குறிகளற்ற தேறிய நிலையில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் சீன அரசு தெரிவிக்கின்றது.

இது இவ்வாறிருக்க; கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து "ஆசியாவின் உண்மையான நோயாளி, சீனா" எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்ட அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ஸ் சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. வெளியிட்டது. சீனாவிற்கு உலக அரங்கில் அவப் பெயர் ஏற்படுத்தும் வகையிலான கருத்துப் பகிர்வு இது எனவும், இதற்காக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ஸ்' மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கோரியிருந்தது. 

அப் பத்திரிகை நிர்வாகம் அதற்கான பதிலெதுவும் கொடுக்காத நிலையில், அச் செய்தி நிறுவனத்திற்காக சீனாவில் பணியாற்றிய செய்தியாளர்கள் மூவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தெரிவித்து, அவர்களது விசா மற்றும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை என்பவற்றை சீன வெளியுறவு அமைச்சகம் இரத்துச் செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.